பர்மிஸ் கோகனட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் தேங்காய்ப் பால் - 4 கப் நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 3 கிராம்பு - 3 ஏலக்காய் - 2 பிரியாணி இலை - ஒன்று பட்டை - ஒன்று பூண்டு - 3 புதினா - சிறிது சோம்பு - ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி முந்திரி - 5 நெய் - 5 தேக்கரண்டி எண்ணெய் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு
வெங்காயம்
பச்சை மிளகாய்
கிராம்பு
பிரியாணி இலை
பட்டை
சோம்பு
இஞ்சி விழுது மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புதினாவைச் சேர்த்து
அரிசியைக் களைந்துப் போட்டு லேசாக வதக்கவும்.
பிறகு தேங்காய்ப் பால் (2 கப் அரிசிக்கு
4 கப் தேங்காய்ப் பால்
) மற்றும் உப்பு போட்டு
ஒரு விசில் வரவிட்டு அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்த்து
கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
டேஸ்டி பர்மிஸ் கோகனட் ரைஸ் ரெடி.