பயற்றங்காய் பலாக்கொட்டைக் கறி
தேவையான பொருட்கள்:
பயற்றங்காய் - 250 கிராம்
பலாக்கொட்டை - 100 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பால் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எலும்மிச்சைப்பழம் - பாதி
செய்முறை:
பயற்றங்காயை 1 அங்குல நீள துண்டுகளாக முறித்துக் கழுவவும்.
பலாக்கொட்டையை தோல் நீக்கி இரண்டாக நீளமாக வெட்டித் தண்ணீரில் போடவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும், வெங்காயம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை பாதியளவு போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பயற்றங்காய், பலாக்கொட்டையைப் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
தக்காளியைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி விடவும். பின்பு மிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
காய்கள் வேகுவதற்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.
பயற்றங்காய், பலாக்கொட்டை வெந்ததும் பாலை சேர்த்து தண்ணீர் சுண்டியதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சூடு சிறிதளவு குறைந்ததும் எலுமிச்சைப்புளி சேர்த்துப் பரிமாறவும்.
சோறு, புட்டுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.