பயறு துவையல் (மற்றும்) சூசியம்
தேவையான பொருட்கள்:
பயறு - 2 கப் உப்பு - தேவையான அளவு உறைப்பு துவையலுக்கு: வெட்டிய வெங்காயம் - 1/4 கப் செத்தல் மிளகாய் - 3 அல்லது 4 கடுகு - சிறிது பெரிய சீரகம் (சோம்பு) - சிறிது தேங்காய் சொட்டு - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு இனிப்பு துவையலுக்கு: தேங்காய்ப்பூ - 3/4 கப் பிரவுன் சீனி (சர்க்கரை) - 1/2 கப் சுசியத்திற்கு: மைதா மா - 1/4 கப் சீனி - 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - சுட்டெடுக்க
செய்முறை:
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். பயறை ஊறவைத்து
உப்பு போட்டு அவித்து எடுத்து மூன்றாக பிரித்து வைக்கவும்.
உறைப்பு துவையல் செய்வதற்கு: வெங்காயம்
கடுகு
மிளகாய் பெரிய சீரகம்
தேங்காய் சொட்டு
சிறிது உப்பு எல்லாவற்றையும் எண்ணெயில் இட்டு வதக்கவும்.
அதன் பிறகு ஒரு பங்கு அவித்த பயறை அதில் கொட்டி கிளறவும்.
சற்று நேரத்தில் இறக்கிவிடவும். இதுவே உறைப்பு துவையல்.
இனிப்பு துவையல் செய்வதற்கு: மீதி இரு பங்கு அவித்த பயறு
தேங்காய்ப்பூ
சீனி
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து Food processorஇல் அல்லது உரலில் போட்டு அரைக்கவும்.
பின்னர் அரைத்தவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சுசியத்திற்கு மைதாமா
உப்பு
சீனியை கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு குழைக்கவும்.
இனிப்பு துவையலில் உருட்டிய உருண்டைகளில் அரைவாசியை இந்த மாவினுள் போட்டு தோய்க்கவும்.
அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு வேகவிடவும்.
பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
சுவையான பயறு துவையல்கள் மற்றும் சூசியம் தயார்.