பப்ஸ் பீன்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பப்ஸ் சீட் - 1 பாக்கெட்

பீன்ஸ் - 20 - 25

பட்டர் - 1/4 கப்

பார்மஜான் சீஸ் - 1/4 கப்

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

அவனை 375 Fல் முற்சூடு செய்து வைக்கவும். முதலில் பீன்ஸின் கடைசி மற்றும் முதல் பகுதியை வெட்டி கொள்ளவும். பின்னர் பின்ஸுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து பிரட்டி வைத்து கொள்ளவும். பட்டரை உருக்கி கொள்ளவும்.

பப்ஸ் சீட்டை 2 இன்ச் அளவிற்கு நீட்டாக கத்தி வைத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்

அதன் பின் பப்ஸ் சீட் ஒன்றை எடுத்து கொள்ளவும். பின் அதில் உருக்கி வைத்துள்ள பட்டரை ப்ரெஸை(brush) வைத்து தடவிய பிறகு கொஞ்சம் பார்மஜான் சீஸ் தூவுவவும்

பின்னர் ஒவ்வொரு 2 இன்ச் நீட்டு சீட்டிலும் 1 (அல்லது) 2 பீன்ஸை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.

இப்படியே எல்லாம் பீன்ஸையும் செய்து அவன் ட்ரெயில் அடுக்கி வைக்கவும்.

அதன் பின் முற்சூடு செய்து வைத்து இருக்கும் அவனில் இதனை 375 F யில் 12 - 15 நிமிடம் வரை வைக்கவும்.

இப்பொழுது சுவையான பப்ஸ் பீன்ஸ் ரெடி. இதனை தக்காளி சஸுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: