பனீர் ஜால்ஃப்ரெஸி
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2 தக்காளி - 2 குடை மிளகாய் - ஒன்று பனீர் - 150 g இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கறி மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி மஞ்சள் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குடைமிளகாயை நறுக்கி வைக்கவும். பனீரில் ஒரு துண்டு மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். தக்காளியை நறுக்கி அரைத்து எடுத்து கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும்
நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். அடுத்து கறிமசாலா மற்றும் மிளகாய் தூளை சேர்க்கவும். நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.
இத்துடன் அரைத்து வைத்துள்ள தக்காளி கூழை சேர்க்கவும். நன்கு வேக விடவும். சிறிது தண்ணீர்
மஞ்சள் தூள்
உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவைக்கவும்.
க்ரேவி வெந்து கொண்டிருக்கும் நேரத்தில்
ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை போடவும்.
மிதமான தீயில் லேசாக சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி கலவை நன்கு வெந்து மசாலா பதத்திற்கு வந்தவுடன்
நறுக்கின குடமிளகாயை சேர்க்கவும்.
சிறிது நேரம் வேகவிட்டு அதில் சுட்டெடுத்துள்ள பனீர் துண்டங்களை சேர்க்கவும். மேலும் சிறிது நேரம் வேகவிட்டு பின்னர் இறக்கவும்.
இறக்கின பிறகு மேலே தனியாக எடுத்து வைத்த பனீரை துருவி
தூவிவிட்டு பரிமாறவும்.