நோகி பாஸ்தா (Gnocchi)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது

கோதுமை மா - 1 கப்

சோள மா - 2 மேசைக்கரண்டி

உப்பு

பட்டர் - 11/2 மேசைக்கரண்டி

ஒலிவ் எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

பேசில் - 1 கட்டு

உள்ளி - 4 பல்லு

பார்மெஜான்/மோற்ஸரில்லா சீஸ் - 3/4கப் (துருவியது)

செய்முறை:

உப்பு, கோதுமை மா, சோளமாவினை கலந்து வைக்கவும்.

உருளைக்கிழங்கை நன்கு உப்பு போட்டு அவித்து ஆற வைக்கவும்.

பின்னர் அதனை பெரிய கண் உள்ள முறுக்கு/இடியாப்ப உரலில் போட்டு கட்டியில்லாமல் பரவலாக பிழிந்து வைக்கவும்.

அதனுள் சிறிது சிறிதாக மாவினைச் சேர்த்து மென்மையாக சப்பாத்தி மாவினைப் போல பிசையவும்.

பின்னர் அதை சிறிய உருண்டைகளாக உருட்டி (கோலி குண்டினைவிட சிறிது குறைவான அளவு) முள்ளுக்கரண்டியின் மேல் வைத்து அழுத்தி உருட்டி எடுக்கவும். (சிப்பி அச்சு போல் வரும்)

இதனை ஒரு சுத்தமான துணி அல்லது ஒரு பேப்பரில் பரப்பி 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.

அடுப்பின் தீயைக் குறைத்து கொதிக்கும் தண்ணீருள் பாஸ்தாவினை போட்டு சிறிது ஒலிவ் எண்ணெய் சேர்த்து உடைய விடாது அவித்து வடித்து வைக்கவும். (வடித்த தண்ணீரில் சிறிது எடுத்து வைக்கவும்)

பேசில், உள்ளி, உப்பு, ஒலிவ் எண்ணெய் (4 மேசைக்கரண்டி) சேர்த்து கிரைண்டரில் பேஸ்ட் போல அடிக்கவும் - பெஸ்ரோ ஸோஸ் (Pesto Sauce).

ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு சிறிது உருக்கி 2 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய் சேர்த்து அதனுள் அடித்த பேசில் கலவையை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறவும்.

பின்னர் அவித்த பாஸ்தா, அரைவாசி சீஸ் போட்டு பிரட்டவும்.

பின்னர் பரிமாறும் தட்டில் கொட்டி மீதி சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த Gnocchi பாஸ்தாவை செய்து ப்ரீசரில் வைத்தும் பயன்படுத்தலாம்.