நெத்திலி கருவாடு சாப்பீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 5 மிளகாய்த் தூள் - அரை மேசைக்கரண்டி மீன் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழம் - பாதி தேங்காய் பால் - 2 மேசைக்கரண்டி கருவாடு - 100 கிராம்

செய்முறை:

மிக்ஸியில் கால் கப் தேங்காய் துருவலை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதை போல பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கருவாடை தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கருவாடை போட்டு அதனுடன் மீன் மசாலா

மிளகாய்த் தூள்

உப்பு ஆகியவற்றை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி பிரட்டி வைக்கவும்.

வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்திருக்கும் கருவாடை போட்டு மொறுமொறுவென்று ஆகும் வரை 4 நிமிடம் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம்

தக்காளி

பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் பொரித்து வைத்திருக்கும் கருவாடை போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும். அதில் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.

அதன் பின்னர் அதில் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு பிரட்டி விடவும். அடுப்பில் தீயை குறைத்து வைத்து 10 நிமிடம் அப்படியே வைத்து இருக்கவும். இடையில் கிளறி விடவும். எல்லாம் ஒன்றாக கலந்து திரண்டு எண்ணெய் வெளி வந்ததும்

இறக்கி வைத்து விடவும்.

மொறுமொறு கருவாடு சாப்பீஸ் ரெடி. இது இஸ்லாமியர்கள் இல்லங்களில் விரும்பி உண்ணும் பக்க உணவு. இதை நெய் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி

வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.

குறிப்புகள்: