நெக்டோ புடிங் கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மில்க் மெயிட் (கன்டென்ஸ்ட் மில்க்) - ஒரு டின்

சீனி(சர்க்கரை) - அரை கப்

தண்ணீர் - ஒரு டின்

நெக்டோ - ஒரு போத்தல்

ரவை(வறுத்தது) - (அரை - ஒரு) சுண்டு

பட்டர் -தேவையானளவு

வெனிலா - அரை தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு (கயூ)(சிறுதுண்டுகள்) - 25 கிராம்

பிளம்ஸ் - 25கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மில்க் மெயிட்(கன்டென்ஸ்ட் மில்க்), தண்ணீர், சீனி(சர்க்கரை)ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதை சூடாக்கி அதில் இக்கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

இக்கலவை நன்றாக கொதித்தும் அதனுடன் ரவை போட்டு கட்டிப்படாமல் நன்றாக கிளறவும்.

அதன் பின்பு அதனுடன் பட்டர், வெனிலா, பிளம்ஸ், முந்திரிப்பருப்பு(கயூ)ஆகியவற்றை கலந்து கிளறவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி இக்கலவையை ஆறவிடவும்.

இக்கலவை ஒரளவு சூடாக இருக்கும் போது நெக்டோ(குளிர்பானம்) கலந்து நன்றாக ஆற விடவும். ஆறிய பின்பு அதை குளிர்ரூட்டியில் வைக்கவும்.

அதன் பின்பு அதை எடுத்து ஓரளவு பெரிய சதுர துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

நெக்டோ புடிங் சிறுவர்கள் விரும்பும் சுவை கூடிய புடிங் ஆகும். அத்துடன் இந்த புடிங்கில் கார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் நிறைந்து உள்ளது. எச்சரிக்கை - சர்க்கரை நேயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - நெக்டோவிற்கு பதிலாக பன்டா, போட்டலோ போன்ற குளிர்பானங்களை பாவிக்கலாம்.