நுட்டெல்லா கேக் போப்ஸ்
தேவையான பொருட்கள்:
சாக்கலேட் ப்லெயின் கேக் - 1
நுட்டெல்லா(nutella) - 1/2 கப்
வெள்ளை மில்க் சாக்கலேட் - 3 பார்
அலங்கரிக்க - ஷுகர் ஸ்ப்ரின்கில்ஸ்
லாலிபாப் குச்சிகள் அல்லது டூத் பிக்ஸ்
ஃபோம் ஷீட்
செய்முறை:
முதலில் கேக்கினை கைகளால் பிசைந்து பொடித்துக் கொள்ளவும்
அதனுடன் நுட்டெல்லாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கேக் பொடியை மாவாக உருண்டைகளாக பிடிக்கும் அளவு சேர்த்துக் கொள்ளவும்
பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
மில்க் சாக்கலேட்களை மைக்ரோவேவ் அவனில் அல்லது வேறு பாத்திரத்தில் டபிள் பாயில் செய்து இளகவிடவும்
அதில் ஒரு லாலிபாப் குச்சியின் முனையை லேசாக முக்கி உருட்டி வைத்த கேக் உருண்டையில் குத்தி இப்படியே எல்லா உருண்டைகளிலும் குத்தி குச்சி மேலே நிற்குமாறு நிறுத்தி வைக்கவும்
10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
பின்பு ஒரு ஃபோம் ஷீட்டை ரெடியாக வைக்கவும்
பின்பு எடுத்து உருக்கிய மீதமுள்ள சாக்கலேட்டை ஒரு சிறிய கப்பில் எடுத்து குச்சியை கைகளால் பிடித்து கேக் உருண்டைகளை முக்கி எல்லா இடமும் சாக்கலேட் நனையும்படி எடுத்து ஒழுகி வருவதை குச்சியை சுழற்றி சுழற்றி மேலே ஷுகர் ஸ்ப்ரின்கில்ஸை தூவவும் பின்பு ஃபோம் ஷீட்டில் குத்தி நிறுத்தி வைக்கவும்
இப்படியே எல்லா உருண்டைகளையும் நனைத்து ஃப்ரீசரில் ஷீட்டோடு சில நிமிடம் வைக்கவும் சீக்கிரம் செட் ஆகும்
செட் ஆனபின் எடுத்து ட்ரீட் பேக்ஸ் இருந்தால் அதில் வைத்து குச்சி வரும் கீழ் பாகத்தில் மெல்லிய ரிப்பன்கள் கொண்டு கட்டி அலங்காரமாக பரிசளிக்கலாம்
அல்லது கப் கேக் லைனரில் வைத்து பார்ட்டிகளுக்கு வைக்கலாம்..அல்லது ஃபோம் ஷீட்டின் மேல் கிஃப்ட் பேப்பரை ஒட்டி அதன் மேல் குத்தி பார்ட்டிகளுக்கு வைக்கலாம்
குறிப்புகள்:
அழகான கேக் பாப்ஸ் பரிசளிக்கவும் குழந்தைகளின் பார்ட்டிகளுக்கும் ஏற்றது