நாஸி மிஞ்ஞா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

க்ரீம் மில்க் - 4 கப்

வெங்காயம் - 3

ஜிஞ்சர், கார்லிக் பேஸ்ட் - 2 டீஸ்பூன்

புதினா - சிறிது

ரம்பை இலை - 1

பட்டை - சிறு துண்டு

ஏலம் - 4

கிராம்பு - 6

குங்குமப்பூ - 1 சிட்டிகை

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

முந்திரி - 10

திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதியை ஊற வைக்கவும். இரண்டு வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

நான்கு கப் அளவு பாலை மூன்று கப் அளவுக்கு வற்ற காய்ச்சி அதில் குங்குமப்பூ சேர்த்துக் கரைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் பாதி அளவு நெய் விட்டு பட்டை ஏலம், கிராம்பு, ரம்பைஇலை தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் புதினா சேர்த்து வதக்கவும்.

பாலுடன் உப்பு சேர்த்து கலவையில் கொட்டி கொதிக்க விடவும்.

பால் நன்கு கொதித்ததும் ஊறிய அரிசியைப் போட்டு பாத்திரத்தை மூடி விடவும். அவ்வப்போது திறந்து கிளறவும்.

சாதம் வெந்ததும். இறக்கி விடவும். எலக்ட்ரிக் ரைஸ்குக்கரிலும் செய்யலாம்.

மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை சிவக்க வறுக்கவும். வெங்காயத்தை சிப்ஸ் துருவியினால் நீளமாக மெலிதாக துருவி மீதமிருக்கும் நெய்யில் ப்ரெளவுனிஷ் ஆகும் வரை வறுக்கவும்.

வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம் மற்றும் நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை சாதத்தின் மேலே கார்னிஷ் செய்யவும்.

மலேஷியர்கள் விரும்பி உண்ணும் இந்த நாஸி மிஞ்ஞான் சிக்கன், மட்டன் கிரேவியுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: