நண்டு கட்லெட் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 2

பெரிய வெங்காயம் - ஒன்று

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி

ப்ரெட் தூள் - ஒரு கப்

மைதா - அரை கப்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லிக் கீரை - சிறிது

செய்முறை:

நண்டை வேக வைத்து உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

நண்டு சதையை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்கு, நண்டு சதை, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்பொடி, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லிக் கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி அதில் இந்த கலவையை போட்டு வதக்கி கெட்டியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

நண்டு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும்.

இதை மைதாமாவு கரைசலில் நனைத்து ப்ரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: