நட்சத்திர பிஸ்க்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

120g-பட்டர்

150g-பாதாம்பருப்பு

130g-ஐசிங்சுகர்

1சிட்டிகை-உப்பு

150g-மைதா மா

2-முட்டை

1/2தே.க-

பேக்கிங்பவுடர்

மாவை குழைத்தவுடன் உருட்டுவதற்கு சிறிது மைதாமா

200g-Raspberry jam

செய்முறை:

பாதாம்பருப்பை பொடியாக அரைத்து பட்டரையும் அதனுடன் 120g ஐசிங்சுகர்,உப்பு,முட்டைமஞ்சள்கரு,மா,பேக்கிங்பவுடர்எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப்பிசைந்து குழைக்கவும்.குழைத்த கலவையை 2 மணி நேரம் குளிர்சதனப்பெட்டியில் குளிரவைக்கவும்.பின் சப்பாத்தி உருட்டுவது போல் உருளையால் உருட்டி நட்சத்திர அச்சினால் உருட்டிய மாவின்மேல் வைத்து அளுத்தி எடுத்து செய்த நட்சத்திரங்களில் அரைவாசி நட்சத்திரங்களிற்கு நடுவில் கத்தியால் அல்லது ஒரு சிறிய வட்ட அச்சினால் அளுத்தி நடுவில் சிறிது ஓட்டை வருமாறு செய்து பேக் செய்யும் தட்டில் ஒரு ஓட்டை இல்லாதது கீழேயும் ஓட்டை உள்ள நட்சத்திரம் மேலேயுமாக ஒவ்வொன்றாக செய்து தட்டில் எல்லாவற்றையும் வைத்து 10-15 நிமிடம் பொன்நிறமாக பேக் செய்து எடுத்து ஆறவிடவும். பின் ஜாமை சிறிது சூடாக்கி ஒவ்வொரு நட்சத்திர வட்டத்திகுள்ளும் விட்டு பின் மீதமாக இருக்கும் 10g ஐசிங்சுகரை எல்லா பிஸ்கட்டுக்கள் மேலே தூவியதும் சிறிது நேரத்தின் பின் பரிமாறலாம்.

குறிப்புகள்: