தூனா டின் மீன் புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தூன மீன் டின் - ஒன்று

வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - நான்கு தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - அரை கைப்பிடி

கொத்தமல்லி தழை - சிறிது

தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை:

டின்னில் உள்ள மீனை தண்ணீரை வடித்து விட்டு உதிர்த்து கொள்ளவும்.

ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்,.

பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.

கடைசியில் தேங்காய் தூருவல் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

மீன் கிடைக்காத இடங்களில் இதை வாங்கி செய்து சாப்பிடலாம். வேலை சுலபம்.