திடீர் கரட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கரட் (துருவியது) - 6 கப்
தேசிக்காய்சாறு (எலுமிச்சங்காய்சாறு) - அரைகப்
எண்ணெய் - அரைகப்
கடுகுத்தூள் - 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 6 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
செத்தல் மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை (வெல்லம்) - சிறிதளவு (விரும்பினால்)
பெருஞ்சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய கரட், கடுகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை (வெல்லம்), தேசிக்காய் சாறு(எலுமிச்சங்காய்சாறு) ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு, பெருஞ்சீரகம்(சோம்பு) பெருங்காயம், செத்தல் மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும்.
பின்பு தாளித்தவற்றை கலந்து வைத்துள்ளவற்றுடன் போட்டு நன்றாக கலக்கவும்.
இவை யாவும் நன்றாக கலந்தவுடன் சுவையான சத்தான மிகமிக ஈசியான திடீர் கரட் ஊறுகாய் தயாராகி விடும்.
அதன் பின்பு இதனை சோறு(சாதம்), பாண், இட்லி ஆகியவற்றில் ஒன்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புகள்:
கரட்டில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, காரட்டின், புரதம், இரும்பு, உயிர்சத்து A,B1,B2,B3,B6,C,D, பொட்டாசியம் பொஸ்பரஸ், மக்னீஸியம், சோடியம், கல்சியம் ஆகியவை நிறைந்த ஒர் உணவுபொருள் ஆகும். இதில் செய்யப்பட்ட கரட் ஊறுகாயில் மேலே கூறப்பட்ட சகல சத்துகளுடன் மேலதிகமாக கொழுப்பு சிட்ரிக் அமிலசத்து போன்ற இன்னும் பல சத்துகள் அடங்கியது. அத்துடன் மிகமிக சுவையானது இதனை செய்து பார்த்து இதன் சுவையையும் சத்துகளையும் அறியவும்.
எச்சரிக்கை - கரட் அலர்ஜி உள்ளவர்கள், அல்சர் உள்ளவர்கள், இருதய நோயாளர் ஆகியோர் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.