தாளித்த சொதி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 200 கிராம் வெந்தயம் - 2 மேசைக்கரண்டி பெருஞ்சீரகம்(சோம்பு) - ஒரு தேக்கரண்டி செத்தல் மிளகாய் - 4 பூண்டு - ஒன்று (30 கிராம்) (முதல்)பால் - 400 மி.லி புளி - 25 கிராம் உப்பு - 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 4 மேசைக்கரண்டி சுடுத்தண்ணீர் - 400 மி.லி

செய்முறை:

சொதி செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றலை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி விட்டு தட்டி வைக்கவும். புளியை 100 மி.லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்

மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கி விடவும்.

அதில் உடனேயே கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றவும். வெந்தயம் வதங்கினால் கசப்பு தன்மையாக இருக்கும்.

கலவையை கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

இறுதியாக பாலை சேர்த்து கிளறி விட்டு ஒரு முறை கொதித்ததும் இறக்கி வைக்கவும்.

சுவையான தாளித்த சொதி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

இந்த தாளித்த சொதியை இடியாப்பத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்புகள்: