தாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ் அல்லது பாஸ்மதி ரைஸ் - 2 கப் தேங்காய்ப் பால் - 200 மில்லி உப்பு - ஒன்றரை தேக்கரண்டி எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - அரை கப் சிகப்பு குடை மிளகாய் துண்டுகள் - கால் கப் ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கொத்து பெரிய வெங்காயம் - ஒன்று ஃபிஷ் சாஸ் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 (தண்ணீரில் ஊறவைத்து அரைத்தது) பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி சீனி - அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி சன் ஃப்ளவர் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

சிக்கன் துண்டுகளை நீளவாட்டில் மெல்லிதாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கெட்டியான தேங்காய்ப் பாலில் தண்ணீர் ஊற்றி 4 கப் அளவாக எடுத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியுடன் தண்ணீருக்கு பதிலாக தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய்

சன் ஃப்ளவர் எண்ணெய் இரண்டையும் கலந்து ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பூண்டு விழுதைப் போட்டு 30 வினாடிகள் வதக்கவும்.

அத்துடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் வேகும் வரை வதக்கவும். பிறகு ஃபிஷ் சாஸ் சேர்க்கவும்.

பிறகு மிளகாய் விழுது

சீனி

உப்பு மற்றும் குடைமிளகாய்

வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.

அத்துடன் வேக வைத்த சாதம் சேர்த்துப் பிரட்டி

ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கித் தூவி இறக்கவும்.

டேஸ்டி தாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

குறிப்புகள்: