தாய்லாந்து கறி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
லெமென் கிராஸ் - 25 கிராம்
ஃபிஷ் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
தாய் சிகப்பு மிளகாய் - 3
பூண்டு - 6 பல்
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சின்ன துண்டாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
லெமென் கிராஸை சின்ன துன்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகாயையும் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நசுக்கிய பூண்டை போடவும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள லெமென் கிராஸ் மிளகாய் கலவையை அதில் போட்டுகிளறவும்.
பின்பு அதில் சிக்கனை போட்டு வதக்கிய பின்பு ஃபிஷ் சாஸை ஊற்றி கிளறவும்.
பிறகு மஞ்சள் பொடி அஜினோமோட்டோ தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்த பின்பு வெள்ளை சோற்றுடன் சாப்பிட ஏற்றது.