தாய்லன்ட் பீன்ஸ் ஃபிரை
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - அரைக்கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
சிவப்பு வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
சோயா சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
ஹொயிசின் சாஸ் - இரண்டு மேசைக்கரண்டி
பீனட் பட்டர் - ஒன்றரை மேசைக்கரண்டி
ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - அரைதேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
வறுத்த வேர்க்கடலை - ஒரு கையளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
பீன்ஸ் காய்களை சுத்தம் செய்து, அதன் காம்புகளை மட்டும் அகற்றி விடவும்.
வெங்காயம்,இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு சிறிய கோப்பையில் சோயா சாஸ், ஹோயிசின் சாஸ், பீனட் பட்டர், மற்றும் சில்லி ஃபிளேக்ஸை போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற நான்ஸ்டிக் பேனில் எண்ணெயை ஊற்றி காயவைத்து வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கவும்.
பிறகு பீன்ஸ் காய்களைப் போட்டு உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.தண்ணீரை சிறிது கூட ஊற்றக்கூடாது.
காய்கள் நன்கு வதங்கியவுடன் தயாரித்துள்ள சாஸ் கலவையை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
பிறகு காய்களை இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, வேர்க்கடலைத் தூளை போட்டு நன்கு கிளறி, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி விட்டு இறக்கி விடவும்.