தயிர் மற்றும் நெய் செய்முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் தயாரிக்க: பால் - அரை லிட்டர் தயிர் - ஒரு மேசைக்கரண்டி நெய் தயாரிக்க: உப்பில்லாத வெண்ணெய் - ஒரு கட்டி முருங்கைக்கீரை - ஒரு கொத்து மெல்லிய துணி வடிகட்டி

செய்முறை:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவிடவும். பாலில் மேலே படியும் பாலாடையை நீக்கிவிடவும்.

பாலின் சூடு தணிந்து அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் வேறு பாத்திரத்திற்கு மாற்றி

அத்துடன் தயிரைச் சேர்த்து ஒரு கரண்டியால் கலந்துவிடவும்.

பிறகு பாத்திரத்தை மூடி 4 மணி நேரங்கள் வைத்திருக்கவும். பால் உறைந்து முழுவதும் தயிராக மாறிவிடும்.

வீட்டிலேயே எளிதில் தயாரித்த தயிர் ரெடி. குளிர் நாடுகளில் வாழ்பவர்கள் பாத்திரத்தை ரேடியேட்டர் அருகே வைத்து விட்டால் எளிதில் உறைந்துவிடும்.

நெய் தயார் செய்வதற்கு தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு

மிகக் குறைந்த தீயில் அடுப்பில் வைத்து உருக்கவும்.

வெண்ணெய் மெதுவாக உருகி

10 நிமிடங்களில் மேலே நுரைத்து நெய் வாசனை வரும். நுரையின் அடியில் நெய் உருகி அடர் நிறத்திற்கு மாறத் துவங்கும்.

அப்போது ஒரு கொத்து முருங்கைக் கீரை அல்லது கறிவேப்பிலையைப் போடவும். மேலும் 5 முதல் 10 நிமிடங்களில் கீரை நன்றாக முறுகலாகத் துவங்கும். இந்த பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் ஒரு வடிகட்டியில் மெல்லிய துணியை விரித்து நெய்யை வேறு பாத்திரம் அல்லது பாட்டிலுக்கு வடிகட்டவும்.

நுரைத்த கழிவுகள் மற்றும் இலை நீங்கி தெளிந்த நெய் கிடைக்கும்.

வீட்டிலேயே சுலபமாக

ஆரோக்கியமான முறையில் தயார் செய்த நெய் ரெடி.

குறிப்புகள்: