தக்காளி சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 கிலோ வொய்ட் வினிகர் - 175 மி.லி மால்ட் வினிகர் - 175 மி.லி சீனி - 250 கிராம் உப்பு - ஒரு மேசைக்கரண்டி வெங்காயம் - ஒன்று ரோஸ்மேரி - 2 நெட்டு பூண்டு - 4

5 பல்லு ஆல்ஸ்பைஸ் (whole allspice) - 8 கிராம்

செய்முறை:

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளியைக் கழுவி கொதி நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்.

தோலை உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.

ரோஸ்மேரியை சுடுநீரில் கழுவி எடுத்து சிறிதாக நறுக்கி வைக்கவும்.

ரோஸ்மேரி

ஆல்ஸ்பைஸ் இரண்டையும் சேர்த்து சுத்தமான துணியில் முடிச்சாகக் கட்டி வைக்கவும். பூண்டு

வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.

அடி கனமான பாத்திரம் ஒன்றில் சிறிது பட்டர் தடவி எடுக்கவும். அதில் நறுக்கின தக்காளி

பூண்டு

வெங்காயத்துடன் இரண்டு வகை வினிகரையும் சேர்க்கவும். அத்துடன் சீனியும் உப்பும் சேர்த்து ரோஸ்மேரி

ஆல்ஸ்பைஸ் முடிச்சினையும் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.

இடையிடையே அடிப்பிடிக்காமல் கலக்கி விடவும். நடுவே ஒன்றிரண்டு முறை கலவையை பீட்டரினால் அடித்துவிட்டால் தக்காளி கரைந்துவிடும்.

ஒன்றரை மணி நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சாஸ் சூடாக இருக்கும் போதே பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்கவும்.

குறிப்புகள்: