தக்காளிக்காய் பால் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளிக்காய் - 250 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

பால் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 நெட்டு

செய்முறை:

தக்காளிகாயை சிறு துண்டுகளாக வெட்டவும்.

வெங்காயம், மிளகாயை நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகாய், உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.

தக்காளிக்காய் வெந்ததும் மசிக்கவும். பின்பு பால் சேர்த்து கிளறி இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் வெங்காயம், பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மிளகாயையும், கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டு பொரிந்ததும் இறக்கி தக்காளிக்காய் கறியில் கொட்டிக் கலக்கவும்.

சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. ஏனெனில் தக்காளியிலும் தண்ணீர் இருக்கும்.