டோர்ட்டில்லா ரோல்ஸ்
தேவையான பொருட்கள்:
டோர்ட்டில்லா ரொட்டி - நான்கு
நறுக்கிய வெங்காயத்தாள் - அரைக்கோப்பை
குடைமிளகாய் - ஒன்று
மெக்ஸிகன் சால்சா - இரண்டு மேசைக்கரண்டி
முட்டை - நான்கு
சேடார் சீஸ்(cheddar cheese) - அரைக்கோப்பை
சவர் க்ரீம்(sour cream) - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி
சில்லி (அ) மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
குடைமிளகாயையும், வெங்காயத்தாளையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
முட்டைகளை ஒரு கோப்பையில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைக்கவும்.
நாண்ஸ்டிக் பேனில் வெண்ணெயை உருக்கி அதில் வெங்காயத்தாளை முதலில் போட்டு வதக்கவும். தொடர்ந்து குடைமிளகாயைப் போட்டு வதக்கி முட்டையை ஊற்றி அது வேகும் வரை நன்கு கிளறிவிடவும்.
உப்பையும், மிளகுத்தூளையும் தூவி வதக்கி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி அதை நான்கு பாகமாக பிரித்து விடவும்.
பிறகு டோர்ட்டில்லா பிரெட்டில் சீஸை தூவி அதன்மீது முட்டை கலவையில் ஒரு பாகத்தை பரவலாக போடவும்.
பிறகு தேவையான சால்சாவை மேலாக போட்டு கடைசியில் சவர் க்ரீமை வைத்து ரொட்டியின் இரண்டு புறமும் முதலில் மடித்து பிறகு சுருட்டிக் கொள்ளவும்.
இதைப் போலவே எல்லா ரொட்டியையும் செய்து அதை இரண்டாக நறுக்கி பரிமாறலாம்.
இந்த சுவையான ரோல்ஸ்சை காலை உணவாகவோ அல்லது மதிய உணவாகவோ எடுத்துச் செல்ல ஏற்றதாக இருக்கும்.