டோபு பொரியல்
தேவையான பொருட்கள்:
டோபு - 1 பக்கட்
உப்பு - சிறிது
கறித்தூள்/மிளகாய்த்தூள் - சிறிது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
முறை 1
========
டோபுவை மெல்லிய கீலங்களாக வெட்டவும்.
பின்னர் அதோடு உப்பு, கறித்தூள்/மிளகாய்தூள் சேர்த்து பிரட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதனுள் டோபு துண்டுகளை போட்டு டீப் ஃபிரை செய்து எடுத்து ஒரு எண்ணெய் ஒற்றும் தாளில் போடவும்.
சுவையான டோபு பொரியல் தயார். இதனை மாலை நேர உணவாக(ஸ்நாக்ஸ்) தக்காளி கெட்ச்சப் அல்லது ஸோஸுடன் சாப்பிடலாம். அல்லது பக்க உணவாக சாப்பிடலாம்.
முறை 2
========
டீப் ஃபிரை செய்ய விரும்பாதவர்கள் டோபுவை சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு/கறித்தூள் சேர்த்து பிரட்டி ஒரு பாத்திரத்தில் சிறிது (~ 3 மேசைக்கரண்டி)எண்ணெய் விட்டு சூடாக்கி டோபு துண்டுகளை போட்டு இரு புறமும் திருப்பி முறுக பொரிய விட்டு எடுக்கலாம்.
இதனையும் ஸ்நான்க்ஸாக உண்ணலாம் அல்லது நூடில்ஸ், சேவை , இடியப்ப கொத்து போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
இதற்கு கட்டியான டோபுவை (Hard Tofu) பயன்படுத்தவும்.