டோனற்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1/8 லிட்டர்

பட்டர் - 90 கிராம்

வெனிலா சுகர் - 1/2 தேக்கரண்டி

மைதாமா - 500 கிராம்

ஈஸ்ட் - 40 கிராம்

சீனி - 1 தேக்கரண்டி

மெல்லிய சுடுநீர் - 1 மேசைக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

முட்டை - 1

சீனி - 65 கிராம்

ஐஸிங் சுகர் - 50 கிராம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பட்டர், வெனிலா சுகரைச் சேர்த்து மெல்லிய சூடாக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு நடுவில் குழியாக்கவும். அதற்குள் சீனி 1/2 தேக்கரண்டி, ஈஸ்ட்டைப் போட்டு அதன் மேல் மெல்லிய சுடுநீரை ஊற்றி சிறிது நேரம் விடவும்.

பின்பு முட்டை, சீனி, உப்பு போட்டு பாலை ஊற்றிக் குழைக்கவும். தேவையாயின் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

மாவை உருண்டையாக்கி ஒரு மணிநேரம் மூடி வைக்கவும். பின்பு மாவை எடுத்து உருளையால் உருட்டவும். 2,5 செ.மீ தடிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு கிளாசால் உருட்டிய மாவின் மேல் வட்டமாக வெட்டவும். பின்பு அந்த வட்டத்தின் நடுவில் ஒரு சின்ன கிளாஸால் வட்டம் வெட்டவும். பெரிய வட்டத்தை எடுத்து வைக்கவும்.

அப்படியே முழுவதையும் செய்து எடுத்து மூடி 15 நிமிடம் வைக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்த மாவைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த டோனற்றை கிச்சன் பேப்பரால் எண்ணெயை ஒற்றி எடுக்கவும். அதன் மேல் ஐஸிங் சுகரை தூவவும்.

நன்கு ஆறிய பின்பு பரிமாறவும்.

குறிப்புகள்: