டெவில்ட் சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரைக் கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 குடை மிளகாய் - 2 (சதுரமாக நறுக்கியது) இஞ்சி

பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு மேசைக்கரண்டி தக்காளி கெச்சப் - ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு

மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம்

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். குடை மிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.

பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவும்.

பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கி இஞ்சி

பூண்டு விழுது வாசம் தணிந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து கிளறவும்.

அதில் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை அடங்கியதும் பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகுத் தூள் தூவவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி 10 - 15 நிமிடங்கள் கழித்து உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

காரமான சுவையான டெவில்ட் சிக்கன் ரெடி. இது ஒரு ஸ்ரீலங்கன் உணவு

குறிப்புகள்: