டெவில்ட் ஃபிஷ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளில்லாத மீன் - 300 கிராம் வெங்காயம் - 3 தக்காளி - 2 பஜ்ஜி மிளகாய் - ஒன்று (பெரியது) தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப உப்பு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மீனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள்

எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் ஊறவிடவும். வெங்காயத்தை நீளவாட்டில் நான்காக நறுக்கி இதழ்களைப் பிரித்துக் கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கி வைக்கவும். பஜ்ஜி மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த மீன் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். (மொறுமொறுப்பாக வறுக்க வேண்டாம்).

கடாயில் ஒரு மேசைக்கரண்டி மீன் வறுத்த எண்ணெயை ஊற்றி வெங்காயம் மற்றும் பஜ்ஜி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும். (பஜ்ஜி மிளகாயின் காரத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்க்கவும்).

மிளகாய் தூளின் பச்சை வாசனைப் போனதும் தக்காளி மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். (வெங்காயம்

பஜ்ஜி மிளகாய் மற்றும் தக்காளியை அரை பதமாகவே வதக்க வேண்டும்).

அதனுடன் வறுத்த மீனைச் சேர்த்து பிரட்டி இறக்கிவிடவும்.

நூடுல்ஸ்

ஃப்ரைட் ரைஸுடன் பரிமாற டேஸ்டியான டெவில்ட் ஃபிஷ் ரெடி.

குறிப்புகள்: