டர்கிஷ் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 3 சிறியது தக்காளி - 3 மீடியம் சைஸ் முந்திரி - அரை கப் கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி வெல்லம் - 5 தேக்கரண்டி வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி உப்பு கொத்தமல்லி தழை
செய்முறை:
பொடியாக நறுக்கிய தக்காளியுடன் தூள் வகை
வெல்லம் எல்லாம் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
இந்த கலவை அரை மணி நேரம் ஊறட்டும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
பின் ஊற வைத்த தக்காளி கலவையை சேர்த்து பிரட்டவும். மூடி போட்டு சிறுந்தீயில் குழைய வேக விடவும்.
அரிசியை நீரின்றி வடித்து விட்டு இந்த கலவையுடன் சேர்த்து பிரட்டி விடவும். பின் தேவையான உப்பு மற்றும் 3 1/2 - 4 கப் நீர் விட்டு ஒரு கொதி வந்ததும் சிறுந்தீயில் மூடி வேக விடவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான டர்கிஷ் புலாவ் தயார்.