ஜுக்கினி கறி
தேவையான பொருட்கள்:
ஜுக்கினி - 1/4 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
சீரகம் - 1 tsp
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 1 1/2 tbsp
செய்முறை:
எண்ணெய் சூடானதும் சீரகம் போட்டு பொரிய விடவும்.
பொரிந்ததும் விலையாக நறுக்கி வைத்துள்ள சுக்கினியை போட்டு வதக்கவும்.
எல்லா பொடி வகைகளையும் தூவவும்.
எல்லவற்றையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு, மல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மூடி போட்டு பத்து முதல் பதினைந்து நிமிடம் (அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை) வேக விட்டு இறக்கவும்.
சுவையான சுக்கினி கறி ரெடி. சூடு சாதத்துடனோ அல்லது, சாம்பார், சப்பாத்திக்கு செமையான காம்பினேஷன்.