ஜில் ஜில் பாயாசம்
தேவையான பொருட்கள்:
இளநீர்வழுக்கை (பொடியாக அரிந்தது) - ஒன்று + அரை கப்
நுங்கு(பொடியாக அரிந்தது) - அரை கப்
தேங்காய் பால்(தடிப்பானது) - ஒரு கப்
பால் டின்(கன்டென்ஸ்ட்மில்க்) - அரை டின்
இளநீர் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்
முந்திரியகொட்டை (கஜூ) - 50 கிராம்
பிளம்ஸ் - 50 கிராம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், இளநீர் வழுக்கை (பொடியாக அரிந்தது), நுங்கு, (பொடியாக அரிந்தது), தேங்காய்பால் (தடிப்பானது), பால் டின்(கன்டென்ஸ்ட் மில்க்), இளநீர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
கலக்கியவற்றை சிறிய கிண்ணங்களில் ஊற்றி அதன் மேல் முந்திரிக்கொட்டை(கஜூ), பிளம்ஸ் ஆகியவற்றை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சத்தானதும்,சுவையானதும்,வெயில் காலங்களுக்கு ஏற்றதுமான பாயாசம் ஜில் ஜில் பாயாசம் ஆகும். இதன் சுவையோ தனிச்சுவை ஆகவே இதை செய்து சுவைத்து மகிழவும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.