ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஐஸ் ஆப்பிள் (நுங்கு) - 10

இளநீர் - 3

தேசிக்காய் (எலுமிச்சம் பழம்) - 2

நன்னாரி சிரப் (சர்பத்) - அரை கப்

தண்ணீர் - 2 டம்ளர்

ஐஸ் கட்டி - தேவையான அளவு

செய்முறை:

ஐஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இளநீரிரை சீவி வழுக்கையுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். தேசிக்காயை(எலுமிச்சம் பழுத்தை) பிழிந்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நுங்கு, இளநீர், எலுமிச்சம்பழசாறு (தேசிக்காய்சாறு), தண்ணீர், நன்னாரி சிரப்(சர்பத்) ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

கலக்கியவற்றை அழகிய கிளாஸ்களில் ஊற்றி ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

ஜில் ஜில் ஐஸ் ஆப்பிள் இளநீர் மிக மிக சுவையானது. வெயில் காலங்களுக்கு ஏற்றதும், சத்துள்ளதும் ஆகும். கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஜஸ் ஆப்பிளை(நுங்கை) தோல் சீவி கிரைண்டரில் (மிக்ஸியில்) போட்டு ஒரு சுற்று சுற்றி அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும், இளநீரிரை சீவி வழுக்கையுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். எச்சரிக்கை- ஐஸ் ஆப்பிள்(நுங்கு) அலர்ஜி உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி பருகவும்.