ஜாம் மார்மலேட் குக்கீ
தேவையான பொருட்கள்:
மாவு (all purpose flour) - 2 கப் சீனி - ஒரு கப் பட்டர் - ஒரு கப் உப்பு - 1/2 தேக்கரண்டி (தேவையானால்) வெனிலா எசன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி பாதாம் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி விரும்பிய ஜாம்/ மார்மலேட் - தேவையான அளவு
செய்முறை:
அவனை 250F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் பட்டரை போட்டு சில நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும். பட்டரில் உப்பு சேர்த்திருந்தால் இப்போது உப்பு சேர்க்க தேவையில்லை.
சீனி
பட்டர் இரண்டும் ஒன்றாக சேரும் வரை அடித்தால் போதும். நீண்ட நேரம் அடிக்க தேவையில்லை.
பின்னர் பாதாம் எசன்ஸ்
வெனிலா எசன்ஸ் இரண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் அடித்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும். பின்னர் கையால் கிளறவும். பிசைய வேண்டாம்.
கலவை உருண்டையாக உருட்டும் பதம் வந்ததும் மாவு சேர்ப்பதை நிறுத்தி விடவும். சில நேரங்களில் மாவு சிறிது மீதமாகலாம்.
கலந்து வைத்திருக்கும் மாவிலிருந்து விரும்பிய அளவில் மாவை எடுத்து உருண்டைகளாக்கி ஒரு பேக்கிங் ட்ரேயில் வைத்து உருண்டைகளின் நடுவில் விரலால் மெதுவாக அழுத்தி விடவும்.
அழுத்திய இடங்களில் விரும்பிய ஜாம் அல்லது மார்மலேட் வைத்து நிரப்பிக் கொள்ளவும். அதிகம் வைத்து நிரப்ப வேண்டாம்.
விரும்பிய வேறு ஜாம்/மார்மலேட் சேர்த்தும் செய்யலாம். மாவு உருண்டைகளை பொடியாக நறுக்கிய முந்திரிபருப்பு அல்லது பாதாம் பருப்பில் உருட்டி பின் நடுவில் அழுத்தி ஜாம்/மார்மலேட் வைத்தும் செய்யலாம்.
செய்து வைத்திருக்கும் குக்கீஸை முற்சூடு செய்த அவனில் வைத்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும். சுவையான ஜாம்/மார்மலேட் குக்கீஸ் ரெடி.