ஜாப்பனீஸ் சீஸ் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

க்ரீம் சீஸ் - அரை கிலோ முட்டை - 5 சீனி - 3 கப் பால் - ஒரு கப் மைதா மாவு - ஒரு கப் புளிப்பில்லாத கெட்டித் தயிர் - ஒரு கப் வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி கேக் பாத்திரத்தில் பூசுவதற்கு: பட்டர் மைதா மாவு - 2 தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓவனை முற்சூடு செய்து கொள்ளவும்.

க்ரீம் சீஸுடன் சீனியைச் சேர்த்து எலக்ட்ரானிக் ப்ளெண்டரால் 5 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் பால் சேர்த்து அடிக்கவும். நன்கு க்ரீம் பதம் வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.

பிறகு தயிரைச் சேர்த்து ஸ்லோ மோடில் வைத்து அடித்து

எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.

அத்துடன் மைதா மாவை சலித்துச் சேர்க்கவும்.

இந்தக் கலவையை ஸ்பேட்சுலாவால் கட்டிகளில்லாமல் நன்கு கலந்து வைக்கவும்.

கேக் பாத்திரத்தில் பட்டர் பூசி

மைதா மாவை பரவலாகத் தூவி கேக் கலவையை ஊற்றவும். பிறகு மைக்ரோவேவ் தட்டில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கேக் பாத்திரத்தை வைத்து 180 டிகிரியில் ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். ஒரு டூத் பிக் கொண்டு கேக் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு

வேகவில்லையெனில் மேலும் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கலாம்.

டேஸ்டி ஜாப்பனீஸ் சீஸ் கேக் ரெடி. இந்த கேக் செய்வதற்கு எனக்கு சரியாக ஒரு மணி நேரமானது. அவரவர் உபயோகிக்கும் ஓவனைப் பொருத்து நேரம் மாறுபடும்.

குறிப்புகள்: