ஜம்பு பழரசம்
தேவையான பொருட்கள்:
ஜம்புபழங்கள் (சப்போட்டா (விதைநீக்கியது) - 10
பால் - 2 கப்
வெனிலா - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு (விரும்பினால்)
ஐஸ்கட்டி - அரை கப்
கஜு - 25 கிராம்
பிளம்ஸ் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு (விரும்பினால்)
செய்முறை:
ஜம்புபழங்கள் (சப்போட்டா), தண்ணீர், பால், வெனிலா, மிளகுத்தூள்(விரும்பினால்), உப்பு (விரும்பினால்) இவையாவற்றையும் மிக்ஸியில் (கிரைண்டரில்) போட்டு நன்றாக அடிக்கவும் .
இதோ பழரசம் தயாராகிவிட்டது. அதன் பின்பு இந்த பழரசத்தை அழகான பூக்கள், பழங்கள், வர்ணங்கள் போட்ட கிளாஸில் (கப், குவளை) ஊற்றி அதன் மேல் கஜு, பிளம்ஸ், ஐஸ் கட்டி சேர்த்து அலங்கரித்து பரிமாறுங்கள்.
குறிப்புகள்:
இது கண்களுக்கு குளிர்ச்சியை தருவதும், உயிர்சத்து சி நிறைந்ததும் சுவையானதும் குழந்தைகளுக்கு விருப்பமானதும் இலகுவாக செய்யகூடியதும், கோடை காலத்திற்கு மிக மிக சிறந்ததும், ரோஜா நிறமானதுமான ஒரு பழரசமாகும். எச்சரிக்கை - ஜம்பு (சப்போட்டா)பழ அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி குடிக்கவும்.