ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கனின் மார்பக துண்டு - அரைக்கிலோ
சோயாசாஸ் - கால் கோப்பை
தேன் - ஒன்றரை மேசைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒன்றரை மேசைக்கரண்டி
கெட்சப் - இரண்டு மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் - ஒரு மேசைக்கரண்டி
துருவிய இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
துருவிய பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
நல்லெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு அகன்ற பீங்கான் கோப்பையில் சிக்கனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு அதில் சிக்கனை போட்டு எல்லா பாகங்களிலும் சாஸ் படும்படியாக செய்து குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அல்லது இரவு முழுவதும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற வைக்கவும்.
பின்பு பேக்கிங் செய்யும் பாத்திரத்தில் வைத்து, 400 டிகிரி F ல் சூடாக்கிய அவனில் வைத்து க்ரில் செய்யவும்.
இதற்கிடையில் கோழி ஊறிய சாஸ்ஸை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை குறைத்து வைத்து சாஸ் கெட்டியாகும் வரையில் வைத்திருக்கவும்.
சிக்கனை பதினைந்து நிமிடம் கழித்து வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வெளியில் எடுத்து விடவும்.
பிறகு சிறிது ஆறியவுடன் மெல்லிய துண்டுகளாக நறுக்கி கெட்டியான சாஸை அதன் மீது ஊறி வெள்ளை சோற்றுடன், ஸ்டிர் ஃபிரைடு காய்கறிகளையும் வைத்து சூடாக பரிமாறவும்.