சௌமின் (சைனீஸ் நூடுல்ஸ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவித்து வடிகட்டிய சைனீஸ் நூடுல்ஸ் - 1 கப்

சூப் க்யூப் - 1

கேரட், கோஸ், கேப்சிகம் - 1 கப்

(குச்சி மாதிரி கட் செய்யவும்)

வெங்காயம் - 1 ( நீளமாக கட் செய்தது )

மிளகு, உப்புத்தூள் - தேவைக்கு

சோயா பீன்ஸ் - 1 டீஸ்பூன்

கார்ன் ஃப்ளார் அல்லது மைதா மாவு - 2 டீஸ்பூன்

அவித்த சிக்கன் துண்டுகள் - சிறிது (விருப்பப்பட்டால்)

எண்ணெய் - 3 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

நூடுல்ஸ் வெந்து வடிகட்டிக்கொள்ளவும். அதிலிருந்து 2 டேபிள்ஸ்பூன் நூடுல்ஸ், 1 டீஸ்பூன் எண்ணெயில் ப்ரவுன் செய்து கொள்ளவும். மீதியில் வெண்ணெய் கலந்து வைக்கவும்.

காய்கறிகள், வெங்காயம் கட் செய்து கொள்ளவும். வெந்த சிக்கனை சிறிய துண்டாக்கி வைக்கவும்.

இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, காய்கறியும் வதக்கவும். சிம்மில் வைக்கவும். சூப் க்யூப் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். காய் வெந்து பின்பு நூடுல்ஸ் சேர்க்கவும். கார்ன் ஃப்ளார் அல்லது மைதாமாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

சிறிது உப்பு, மிளகுத்தூள், சிக்கன் துண்டுகள் சேர்க்கவும்.

நூடுல்ஸ், காய்கறி, சிக்கன் துண்டு, ப்ரவுன் செய்த நூடுல்ஸ், கரைத்து ஊற்றிய கார்ன் மாவு எல்லாம் சேர்த்து சிறு தீயில் கொதி வந்ததும் இறக்கவும்.

சுவையான சைனீஸ் சௌமின் ரெடி. இதனை பவுளில் ஸ்பூன், ஃபோர்க் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சைனீஸ் உணவு விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.