சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட் (எனி பிராண்ட்)
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 1
கோஸ்(மிகவும் மெலிதாக நீளமாக நறுக்கியது1) - 1 1/2 கப்
காரட், பீன்ஸ் - 1 கப் (மெலிதாக நீளமாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
அஜினமோட்டோ - ஒரு பின்ச்
சால்ட் - தேவையான அளவு
வெங்காயத்தாள் - ஒரு கைப்புடி
செய்முறை:
முதலில் நூடுல்ஸை ஏழு கப் நீரில் முக்கால் பாகமாக வேக வைக்கவும்.
வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரால் நன்கு அலச வேண்டும்.
சுத்தமாக நீரை வடித்ததும் அதில் ஒரு மூடி லைம் பிழிந்து மிக்ஸ் பண்ணவும்.
காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி அனைத்து காய்களையும், பட்டாணியையும் போட்டு இரண்டு நிமிடம் வதங்கினதும் உப்பு, அஜினமோட்டோ போட்டு மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும்.
வேக வைத்து எடுத்துள்ள நூடுல்ஸை காய்க்கலவையில் போட்டு காய்களுடன் சேருமாறு பிரட்டி இறக்கவும்.
வெங்காயத்தாள் போட்டு பரிமாறவும்.