சைனீஸ் ஸ்புரொவுட் ஸ்டிர் ஃபிரை
தேவையான பொருட்கள்:
முளைவிட்ட பச்சைபயிறு - நான்கு கோப்பை
சிக்கனின் மார்பக துண்டு - கால் கிலோ
காளான் - ஒரு கோப்பை
சைனீஸ் கேபேஜ் - ஒரு கோப்பை
கேரட் - அரை கோப்பை
செல்லரி - அரை கோப்பை
வெங்காயத்தாள் - அரை கோப்பை
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
சோயா சாஸ் - கால் கோப்பை
கார்ன் ஸ்டார்ச் - ஒரு மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
கார்ன் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கனை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.காய்கறிகளையும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு சிறிய கோப்பையில் கார்ன் ஸ்டார்ச்சை கால்க்கோப்பை நீரில் கரைத்து அதனுடன் சில்லிசாஸ், மற்றும் சோயா சாஸையும் கலந்து வைக்கவும்.
ஒரு அகலமான நான்ஸ்டிக் சட்டியில் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.அதில் சிக்கன் துண்டுகளையும் நசுக்கிய பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.
சிக்கன் நன்கு வெந்தவுடன் கேரட், காளான் செல்லரி ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறிவிடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து தயாரித்துள்ள சோயா சாஸ் கலவைய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு முளைவிட்ட பயிறு, கேபேஜ், மற்றும் வெங்காயத்தாலையும் போட்டு நன்கு கிளறி விட்டு உப்பையும் மிளகுத்தூளையும் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
சுவைய்யான ஸ்டிர் ஃபிரை தயார்.இதனை வெள்ளை சோற்றுடன் சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.