சைனீஸ் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

வெங்காயம் - 1

சோயாசாஸ் - 1/2 கப்

வினிகர் - 1/4 கப்

நல்லமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மைதாமாவு - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்கவும். வெங்காயத்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழித்துண்டுகளைப்போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், நல்லமிளகுத்தூள், மஞ்சள்தூள், சோயாசாஸ், வினிகர், நல்லெண்ணெய், அஜினோமோட்டோ மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்துள்ள கோழித்துண்டு கலவையை 1 மணி நேரம் கழித்து அப்படியே எல்லாவற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 1- 2 விசில் விட்டு அரைவேக்காடு வேகவைத்து குக்கரை இறக்கவும்.

பின்னர் கார்ன்ஃப்ளார் மாவு, மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கரைத்து வைக்கவும்.

வாணலியில் பொரிக்கத்தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும். குக்கரில் இருந்து கோழித்துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண்டாக போட்டு நன்றாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும். சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.

குறிப்புகள்:

நீங்கள் உப்பு போடும் போது பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயம், அஜினமோட்டோவிலும் சரி சோயா சாஸிலும் உப்புத் தன்னமையுடையது. அதனால் உப்பை குறைவாக போடுவது நல்லது.