சைனீஸ் சாடேட் ஸ்பைனாச்
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - இரண்டு கட்டு
வெங்காயத்தாள் - ஒரு கோப்பை
பூண்டு - நான்கு பற்கள்
இஞ்சி - இரண்டு துண்டுகள்
வறுத்த எள்ளு - இரண்டு தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் - அரை தேக்கரண்டி
சோயாசாஸ் - ஒரு மேசைக்கரண்டி
ரைஸ் வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
கடலெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
செய்முறை:
பசலைக்கீரையை நன்கு சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து விட்டு நன்கு நொறுங்க நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தாளையும் வெள்ளையும் பச்சையுமாக சேர்த்து நறுக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கிகொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து முதலில் இஞ்சியைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து பூண்டையும் சில்லி ஃபிளேக்ஸையும் போட்டு நன்கு வாசனை வரும்வரை வதக்கி வெங்காயத்தாளை போட்டு கலக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கீரையில் ஒரு பிடியை போட்டு வதக்கவும். அது வதங்கியவுடன் மீண்டும் ஒரு பிடியைப் போட்டு வதக்கவும். வேகவிட வேண்டாம்.
இவ்வாறு அனைத்தையும் போட்டு வதங்கிய பிறகு சோயாசாஸ், வினிகர், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்கு கிளறி விட்டு கடைசியில் எள்ளைத்தூவி இறக்கி விடவும்.
இந்த சுவையான சைனீஸ் கீரை வதக்கலை அசைவ வகைகளுடன் பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.