சைனீஸ் ஃப்ரைடு ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப்

இறால் - 250 கிராம்

பச்சை பட்டாணி - 100 கிராம்

முட்டை - 2

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

பூண்டுபல் பெரியதானால் - 8

உப்பு - தேவையான அளவு

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி(சைனீஸ் எள் எண்ணெய் கிடைத்தால்

நல்லது, இல்லை என்றால் சூரிய காந்தி எண்ணெய் உபயோகபடுத்தலாம்)

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை உப்பு போட்டு பொலபொலவென்று சோறு ஆக்கிக் கொள்ளவும்.

இறாலை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கிகொள்ளவும், பட்டாணியை வேக வைக்கவும். (வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஐஸில் இருக்கும் பட்டாணியை அப்படியே சேர்க்கலாம்).

முட்டையை கலக்கி சிறிது எண்ணெயில் பொரித்து சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.

பூண்டை நசுக்கி கொள்ளவும், பின்பு ஒரு நாண் ஸ்டிக் சட்டியில் எண்ணெய் ஊற்றவும். அதில் நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.

அதில் இறாலை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் பச்சைபட்டாணி, முட்டை, மிளகு தூள், அஜினோமோட்டோ, உப்பு அனைத்தையும் போட்டு கிளறவும்.

பிறகு சோற்றை போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: