சுவிஸ் சார்ட் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுவிஸ் சார்ட் கீரை - ஒரு கட்டு வெங்காயம் - ஒன்று காய்ந்த மிளகாய் - 3 பூண்டு - 5 பல் தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி கடுகு

சீரகம்

பெருங்காயம்

உளுந்து

கடலைப் பருப்பு

எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கீரையின் நடுவே உள்ள பெரிய நரம்பு போல உள்ள பகுதியை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு

சீரகம்

பெருங்காயம்

நசுக்கிய பூண்டு

பருப்புகள்

காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் கீரை

உப்பு சேர்த்து வதக்கவும். கீரையில் உள்ள தண்ணீரே போதுமானது.

தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான சுவிஸ் சார்ட் பொரியல் தயார்.

குறிப்புகள்: