சுக்கினி சாம்பார்(zucinni)
தேவையான பொருட்கள்:
சுக்கினி - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
கடுகு - தாளிக்க
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
சுக்கினியை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். வெங்காயம் மற்றும் தக்காளியையும் வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் போடவும்.
இதன் பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
இப்பொழுது நாம் வேக வைத்துள்ள துவரம் பருப்புடன் சிறிது தண்ணீர் கலந்து இதில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்த பின்னர் அதில் சுக்கினியை சேர்த்து வேகவிடவும். 10 - 12 நிமிடம் கழித்து சுக்கினி நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லித் தழையை தூவவும். இப்பொழுது சுவையான சுக்கினி சாம்பார் ரெடி.
இதனை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
சுக்கினி சீக்கிரமாக வெந்துவிடும் என்பதால் கடைசியில் சேர்க்கவும்.