சில்லி ப்ரைஸ்
தேவையான பொருட்கள்:
பஜ்ஜி மிளகாய் - 6
மைதா - 1 கப்
முட்டை - 3
பால் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1/2 tsp
பூண்டு - 4 பல்
கரம் மசாலா - 1/4 tsp
ப்ரெட் க்ரும்ஸ் - 1 கப்
துருவிய சீஸ் - 1/2 கப்
மிளகு தூள்- 1/2 tsp
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி புதினா - சிறிதளவு
வினிகர் - ஊறவைக்க
செய்முறை:
மிளகாயை நீள நீளமாக அறிந்து (பிரெஞ்சு ப்ரைஸ் போல) விதையை நீக்கி கொஞ்சம் வினிகரில் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை பரப்பி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டை பால் இரண்டு ஸ்பூன் மாவு பொடியாக நறுக்கிய பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் ப்ரெட் க்ரும்ஸ் சீசே, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சீஸ் மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
நறுக்கி ஊறவைத்துள்ள மிளகாயை முதலில் மாவில் பிரட்டி பிறகு முட்டை கலவையில் பிரட்டி கடைசியாக ப்ரெட் க்ரும்ஸ் கலவையில் பிரட்டி பேகிங் ட்ரேயில் வைக்கவும்.
ஓவனை 400 டிகிரிக்கு முற்சூடு செய்தது பேகிங் ட்ரேயை உள்ளே வைத்து 18-20 நிமிடம் பேக் செய்யவும். நடுவில் ஒரு முறை பிரட்டி விடவும்.
சுவையான மாலை நேர காரசாரமான ஸ்நாக் தயார்.
குறிப்புகள்:
ஓவன் இல்லை என்றால் எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
பஜ்ஜி மிளகாயில் இல்லாமல் காப்சிகமிலும் செய்யலாம்.