சில்லி சம்பால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் - 30

பழுத்த மிளகாய் - 3

பெ.வெங்காயம் - 2 (பெரியது)

பூண்டு - 7 பல்

தக்காளி - 3 (சிறியதாக வெட்டிக்கொள்ளவும்)

நெத்திலி - 1 கைப்பிடி

சீனி - 1 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெத்திலியை எண்ணையில் வறுத்து நன்றாக பொடித்து வைக்கவும்.

காய்ந்த மிளகாயில் சுடுநீரை ஊற்றி பிறகு வடிக்கவும். அதனுடன் பழுத்த மிளகாய், வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். சட்டியில் எண்ணை ஊற்றி எண்ணை காய்ந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பிறகு (எண்ணை வாடை அடிக்காமல் இருப்பதற்கு) மீண்டும் எண்ணையை காயவைத்து மிளகாய் சாந்து, தக்காளி போட்டு வதக்கவும். வதங்கியதும் உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மெதுவான தீயில் வேகவைக்கவும். மசாலாவில் எண்ணை மிதந்ததும் வறுத்த நெத்திலி பொடி, சீனி போட்டு கிளறிய பின் இறக்கவும்.

குறிப்புகள்:

இதை முட்டை, மீன், தவ்வு மற்றும் வறுத்த நெத்திலி போன்றவற்றுடன் சமைக்கலாம்.