சிம்பிள் ஸ்பகடி (Spaghetti)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பகடி - 1/2 பாக்கட் (1/2 lb)

தக்காளி பேஸ்ட் - 2 தேக்கரண்டி

உள்ளி - 4 பல்லு

ஒலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

ஸ்பகடி மிக்ஸ் - 3 தேக்கரண்டி

பேசில் இலை - 5

உப்பு

செய்முறை:

3/4 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதனுள் உப்பு, 1 மேசைக்கரண்டி எண்ணெய், ஸ்பகடியை உடையாமல் போட்டு அவித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு சீவல்களாக வெட்டிய உள்ளியைப் போட்டு வதக்கவும்.

பின்னர் தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுள் ஸ்பகடி அவித்த தண்ணீர் 1/4 கப், உப்பு, ஸ்பகடி மிக்ஸ் சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.

கலவை (sauce) தடித்ததும் அதனுள் அவித்த ஸ்பகடியை போட்டு 3 நிமிடங்களுக்கு கிளறி இறக்கவும்.

பின்னர் பேசில் இலைகளை பிய்த்துப் போட்டு கிளறவும்.

சுவையான ஸ்பகடி தயார். இதனை பரிமாறும் தட்டில் போட்டு பரிமாறவும். விரும்பினால் சீஸ் தூவியும் பரிமாறலாம்.

குறிப்புகள்:

உறைப்பு விரும்புபவர்கள் சிறிது சில்லி ஃபிளேக்ஸும் சேர்த்து ஸோஸ் செய்யலாம். 3 மேசைக்கரண்டி வால்நட்டை சிறிய துண்டுகளாக்கியும் ஸோஸுடன் சேர்த்து கலக்கலாம். சுவையாக இருக்கும்.