சிம்பிள் வெஜிடபுள் ஸ்பகடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பகடி - ஒரு பாக்கெட் (500 கிராம்) வெங்காயம் – ஒன்று (மெல்லியதாக நறுக்கியது) பீன்ஸ் - ஒரு கப் (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது) காரட் - ஒரு கப் (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது) கோவா / கேபேஜ் - ஒரு கப் (மெல்லியதாக நறுக்கியது) பயறு முளை - ஒரு கப் லீக்ஸ் - ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது) ஸ்பிரிங் ஆனியன்ஸ் - 1/2 கப் (மெல்லியதாக நறுக்கியது) ரெட் / க்ரீன் பெப்பர்ஸ் - ஒரு கப் (நீளவாக்கில் நறுக்கியது) உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 3 டேபிள் ஸ்பூன் (அல்லது மிளகாய் தூள் தேவைக்கேற்ப) எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ளவைகளை நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது நேரம் வதங்கியதும் அதனுடன் நறுக்கின பீன்ஸை போட்டு வதக்கி விடவும்.

பீன்ஸ் வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காரட்டை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களுக்கு பின்

நறுக்கின பெப்பர்ஸை சேர்க்கவும்.

அதன் பிறகு லீக்ஸை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எல்லா காய்கறிகளும் சேர்ந்து சிறிது நேரம் வதங்கியதும் கேபேஜை சேர்த்து கிளறி விடவும்.

எல்லாம் காய்களும் நன்கு வெந்தவுடன்

பயறு முளைகளை சேர்க்கவும்.

சிறிது நேரம் கழித்து சில்லி சாஸ் அல்லது மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும்.

பின்னர் சோயா சாஸ் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கிளறி விட்டு இறக்கும் முன்

ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கி விடவும்.

ஸ்பகடியை அதன் பாக்கெட்டில் கூறியுள்ள முறைப்படி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு செய்து வைத்திருக்கும் காய்கறி கலவையை ஸ்பகடியுடன் சேர்த்து நன்கு கிளறவும். தேவைக்கேற்றவாறு உப்பு

சில்லி சாஸ்

சோயா சாஸ் சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் அஜினோமோட்டோவும் சேர்த்துக் கொள்ளலாம். முட்டை பொரித்து சேர்த்தால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: