சிப்பி மசாலா
தேவையான பொருட்கள்:
சிப்பி - அரை கிலோ வெங்காயம் - 2 மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி அரைக்க: சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 3 பற்கள் இஞ்சி - கால் அங்குலத் துண்டு சோம்பு - அரை தேக்கரண்டி எலுமிச்சை - பாதி உப்பு - தேவையான அளவு எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
சிப்பிகளை ஓடும் நீரில் நன்றாக அலசிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு
அத்துடன் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு
சிப்பிகளையும் போட்டு மூடி 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
கொதித்த தண்ணீரிலிருந்து வரும் ஆவியில் சிப்பிகள் சூடாகி
அதன் ஓடு திறக்கும். உடனே அவற்றை வடிகட்டிக்கு மாற்றவும்.
கைகளால் சிப்பியின் ஓட்டை நீக்கவும். அதன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதி இருக்கும்.
உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து
நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தூள் வகைகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தனியாக எடுத்து வைத்துள்ள சிப்பிகளின் சதைப் பகுதியைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான சிப்பி மசாலா தயார்.