சிக் பீஸ் ஸ்பிரெட் (Hummus)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரெடிமேட் கொண்டைக்கடலை - ஒரு கேன் 540ml

பூண்டு - நான்கு பற்கள்

வறுத்த எள்ளு - நான்கு மேசைக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - கால்கோப்பை

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

உப்புத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

கடலை அடைக்கப்பட்ட நீரை கால் கோப்பையளவிற்கு எடுத்துக் கொண்டு மீதியை களைந்துவிடவும்.

பிறகு அரவை இயந்திரத்தில் பூண்டு, எள், சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைப்போட்டு எலுமிச்சைச்சாற்றை ஊற்றி நன்கு அரைக்கவும்.

பின்பு கொண்டைக்கடலையும், எடுத்து வைத்துள்ள நீரில் பாதியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது நீரைச் சேர்த்து தளர்ச்சியாக செய்துக் கொள்ளலாம்.

இந்த சுவையான ஸ்பிரெட்டை பிட்டா பிரெட் அல்லது பிடித்தமான சிப்ஸ் மற்றும் காய்கறிகளுடன் டிப்பிங் சாஸாக பரிமாறலாம்.

குறிப்புகள்:

ரெடிமேட் கடலைக்கு பதிலாக, ஒரு கோப்பை கொண்டைகடலையை இரவு முழுவதும் ஊறவைத்து மற்ற நாள் வேகவைத்தும் இதே போல் செய்யலாம்.