சிக்கன் ஸ்பினாச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரைகிலோ

ஃப்ரெஷ் பாலக்கீரை - கால் கிலோ

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 2 பல்

பச்சை மிளகாய் - 1

மிளகு - கால் ஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 2

கறி மசாலா - 1 டீஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சிக்கன் துண்டுகளை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும். பின்பு சிக்கனில் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர், உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

பாலக்கீரையை ஆய்ந்து நன்கு அலசி எடுத்துவைக்கவும். இதனை தனியாக ஒரு பாத்திரத்தில், சிறிய இஞ்சி துண்டு, 2பூண்டு பல், மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். ஆறவைத்து ப்ளெண்ட் பண்ணிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் சிறியதாக கட் பண்ணி வைக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு போடவும். வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும். தக்காளி, கறி பவுடர், சில்லி பவுடர், உப்பு சேர்த்து 3 நிமிடம் மூடிவைக்கவும்.

பின்பு சிக்கனை போட்டு பிரட்டி 5 நிமிடம் மூடி வைத்து பின் திறந்து பாலக்கீரை சேர்த்து 25 - 30 நிமிடம் வேகவிடவும். கெட்டியானவுடன் இறக்கவும்.

சுவையான சிக்கன் ஸ்பினாச் ரெடி. ஆலிவ் க்ரீன் கலரில் பார்க்கவே அழகாக இருக்கும். இதனை நாண் ப்ரெட் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்: