சிக்கன் பிட்ஸா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிட்ஸா பேஸ் 6" - 3 சிக்கன் - 100 கிராம் பல்லாரி வெங்காயம் - 2 தக்காளி - 2 (சிறியது) குடைமிளகாய் - ஒன்று தக்காளி சாஸ் - சிறிது கார்லிக் சில்லி சாஸ் - சிறிது (விருப்பப்பட்டால்) பார்பிக்யூ சாஸ் - சிறிது சீஸ் - 7 ஸ்லைஸ் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் மிளகாய் தூள் - சிறிது உப்பு - சிறிது

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் சிக்கனை பார்பிக்யூ சாஸ்

மிளகாய் தூள்

உப்பு போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

பின் அதை ஒரு வாணலியில் சிறிது நீர் விட்டு வேக விடவும். உடனே வெந்து விடும்.

பிட்ஸா பேசில் சுற்றிலும் சிறிது ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.

பிட்ஸா பேசில் மேல் பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் கார்லிக் சில்லி சாஸ் இரண்டையும் பரவலாக தேய்க்கவும்.

பின்னர் அதில் நடுத்தரமாக நறுக்கிய வெங்காயத்தை பரவலாக தூவவும். இவ்வாறே தக்காளி

குடைமிளகாய்

சிக்கன் ஆகியவற்றையும் பரவலாக தூவவும்.

அதன் மேல் சீஸ் ஸ்லைஸ் துண்டுகளை பரப்பி வைக்கவும்.

பின்னர் 220 டிகிரிக்கு

15 நிமிடம் அவனை ப்ரீஹீட் செய்யவும். அதில் பீட்ஸாவை 10 நிமிஷம் அல்லது சிறிது பிரவுன் நிறம் வரும் வரை வைக்கவும். பின் அதை எடுத்து பார்பிக்யூ சாஸை குறுக்கும் நெடுக்குமாக ஊற்றி மேலும் 2 நிமிஷம் வைக்கவும்.

சுவையான பார்பிக்யூ சிக்கன் பிட்ஸா ரெடி.

குறிப்புகள்: